புலத்திலும் களத்திலும் வாழும் எம்மவர்க்கு இலண்டன் நம்பிக்கை ஒளி விடுக்கும் பணிவான வேண்டுகோள்.

  • By Satha
  • August 2, 2019
  • 0
  • 121 Views

Sharing is caring!

புலத்திலும் களத்திலும் வாழும் எம்மவர்க்கு இலண்டன் நம்பிக்கை ஒளி விடுக்கும் பணிவான வேண்டுகோள்.
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் எதையும் தீர விசாரித்து அறிவதே மெய். இதனை புலத்திலும், களத்திலும் வாழும் நன்கொடையாளர்களும், பயனாளிகளும் மனதில் கொள்ள வேண்டும். புலத்திலும் களத்திலும் பலர் தாயக உணர்வோடு உள்ளனர். எனினும் புலத்திலும் களத்திலும் வாழும் ஒரு சிலர் தாயக உணர்வோடு இல்லை. புலத்தில் தாயகப் பற்றும் இன உணர்வும் படிப்படியாகக் குறைந்து வருவது தான் வேதனையான விடயம். போர் ஓய்வுக்குப் பின் தோற்றம் பெற்ற மாயையும் விமர்சனங்களும் புலத்திற்கும், தாயகத்திற்கும்; புரிந்துணர்வற்ற நிலையை உருவாக்கிடக் கூடிய நிலை இருப்பதை உணரக் கூடியதாக உள்ளது. தாயக மக்களின் வாழ்வாதாரம் ஜுவனோபாய, தொழில், வாழ்க்கை மற்றும் கல்வி அபிவிருத்திக்கான உதவி தொகைகளின் வீதம் குறைந்து கொண்டே செல்கிறது. புலம் பெயர் கொடை வள்ளல்களும், நன்கொடையாளர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சி கண்டுள்ளது தான் இதற்கான காரணமாகும்.போருக்குப் பின்னரான எமது தாயகத்தைக் கட்டி எழுப்ப என்ன செய்தோம் என்பதை ஆராயும் போது மலையும், மடுவுமாகவே நிலைமைகள் உள்ளன. பொது மக்களின் நலனுக்கான பணிகளைச் சேவைகளை மேற்கொள்ளும் போது குற்றம் காண்பதும் குறைகளை சொல்வதும், விமர்சனங்கள் அடுக்குவதும் சகஜமே இதேவேளை ஒரு காரியத்தைச் சாதிப்பது என்பது கடினமான விடயமே என்பதையும் மறுக்க முடியாது. போருக்குப் பின் பல தொண்டு நிறுவனங்கள்; புற்றீசல் போலத் தோற்றம் பெற்றன ஆனால் அதே வேகத்தில் பல நிறுவனங்கள் சூறாவளி போலக் காணாமல்ப் போய்விட்டன. தாயகத்தில் விரல் விட்டு எண்;னக்கூடிய அளவுக்கு புலம் பெயர் மக்களினால் நிரந்தர அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு கருமம் ஆற்றப்படவில்லை என்பதும் கண்கூடு. சிறு குழுக்களாகப் பிரிந்து நின்று வேலைத் திட்டங்களை மேற்கொள்வதும் தாயகத் தொண்டுக்களுக்கான சரியான தலைமை இல்லாததும் தான் இதற்கான காரணம.; தாயக சமூகப்பணி சார்ந்த சமூக ஆர்வலர்கள், இன உணர்வாளர்கள் தொடர்ந்தும் எம் இனத்துக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டுமென்று துடிப்போர் கவனத்துக்கு ஒரு உணர்வுபூர்வமான வேண்டுகோளை இலண்டன் நம்பிக்கை ஓளி விடுக்கின்றது. காய்க்கின்ற மரத்துக்குத் தான் கல்லெறிவிழும், அதுபோலத் தான் சமூகப் பணி செய்வோருக்கு பல்வேறு விமர்சனங்களும் வசைபாடுவோர்களும் இருப்பார்கள். இந்த யதார்த்த பூர்வமான, அனுபவ பூர்வமான உண்மையை உணர்ந்த பிரச்சனைகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாகப் பேசி கலந்துரையாடல்கள், ஆலோசனைகளை நடத்த வேண்டும். தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம் ஆனால் தவறுகளையும் விமர்சனங்களையும் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆதாரமற்ற விமர்சனங்களைப் பற்றி தீர ஆராயாமல் எந்த முடிவுக்கும் வரக் கூடாது. உங்களின் தாராள சமூகப்பணியையும், நிதியுதவியை வழங்குவதை நிறுத்தி விடாது வறுமையில் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்காக உதவி வழங்குங்கள். அதே வேளை உதவிகளின் பயன்பாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். இலண்டன் நம்பிக்கை ஒளி உங்கள் தாயகத்துக்கான பயன்பாடுகளைத் தொடர்ந்தும் பிரதிபலித்து வரும். தாயகப் பிரச்சனைகளை புலத்திலிருந்து கண்டமாதிரி விமர்சிக்கக் கூடாது. அதே போன்று புலத்திலிருக்கும் பிரச்சினைகளை தாயகத்திலிருந்து விமர்சிக்கவும் முடியாது.ஏனெனில் ஆதாரமற்ற விமர்சனங்களும் நடைமுறை ரீதியான பிரச்சனைகளும் உண்டு. நாமறிந்த வரையில் சென்று ஒரிரு வாரங்கள் தங்கி வந்த பின் செய்யும் விமர்சனங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. யு9 பாதையூடாக யாழ்ப்பாணம் சென்றால் தாம் விமர்சனம் செய்யும் (சுயநல நோக்குக்காக)தகுதி பெற்றுவிட்டதாகப் பலர் நினைக்கிறார்கள். இதனைவிட மிகவும் வேதனையளிக்கும் விடயம் உதவி செய்ய மனமில்லாதவர்கள் தம்மை நியாயப்படுத்த உதவி செய்கின்ற நல்ல மனம் படைத்தவர்களையும் குழப்பி விடுகின்றனர். இவர்கள் போன்ற பொறுப்பற்ற மனிதர்கள் பற்றி புலம் வாழ் தமிழ் மக்கள் அவதானமாக இருத்தல் அவசியம். வெறும் பொழுது போக்குக்காக அல்லது வீண் விதன்டாவாதமாக எமக்கு எல்லாம் தெரியும் என்ற அகம்பாவ உணர்வுடன் சிந்திக்காமல் கதைப்பது எமது இனத்தை நாமே அழிப்பதற்கு ஒப்பானதாகும். தாயக சமூக செயற்பாட்டில் இருப்பவர்களை குழப்பிவிடுவதில் பலர் புலமைத்துவம் பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்தப் புலவர்கள்(?) எம் மத்தியில் அநேகம் பேர். இவ்வேளையில் உங்கள் லண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் சமூகப்பணி நிதி சேகரிப்புக்குத் துணையாக இருக்கும் வர்த்தகப் பிரமுகர்களே, சமூக சேவை நலன் விரும்பிகளே உங்களுக்கோர் அன்பான வேண்டுகோள். கடந்த காலங்களில் நம்பிக்கை ஒளி நிறுவனம் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பாக நாம் கவனம் எடுத்துள்ளோம். எமது நிறுவனத்தின் வளர்ச்சியையும், சமூக சேவை மனித நேய தொண்டுப் பணிகளின் முன்னேற்றத்தையும் சகிக்க முடியாத சில விசமிகள் எமது தொண்டுப் பணிக்கு களங்கம் கற்பிக்க முற்படுகின்றனர். இத்தகையவர்களை நாம் இனங் கண்டு அவர்களின் சதி வேலைகளை முறியடித்து மக்களின் சமூகப் பொருளாதார கல்வி அபிவிருத்தி முன்னேற்றங்களை வென்றெடுப்போம். இலண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் சமூகப்பணி மீதுயாரும் குறை கானும் பட்சத்தில் எம்மீதான விமர்சனங்களுக்குரிய பதிலை வழங்கவும் சமூகப் பணி தொடர்பான விபரங்களை விளக்கவும் நாம் தயாராகவுள்ளோம். உங்கள் மகத்தான பங்களிப்புக்கு மதிப்பளித்து தங்களைக் கொளரவப்படுத்தி தங்கள் கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்பிக்கை ஒளி நிறுவனத்துக்கு உண்டு என்பதையும் நாம் உளமார ஏற்றுக் கொள்கின்றோம். தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கும், விமர்சனங்களுக்கும் விளக்கம் தேவைப்படுமிடத்து 07534814606 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடன் கரம் கோர்த்து எம்மாளியன்றளவு மனித நேய தொண்டுப் பணிகளை முன்னெடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
shares