வர்த்தகப் பிரமுகர்கள் சமூகசேவை நலன் விரும்பிகளின் கவனத்திற்கு…

  • By Satha
  • March 5, 2019
  • 0
  • 227 Views

Sharing is caring!

“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்.” என சான்றோர் கூறியபடி செயற்படுவோம்.

புலத்திலும், களத்திலும்   வாழும் பலர் தாயக உணர்வோடு உள்ளனர். புலத்திலும், களத்திலும்  வாழும் சிலர் தாயக உணர்வோடு இல்லை. தாயகப் பற்றும் இன உணர்வும் படிப்படியாக குறைந்து வருவது வேதனை அளிக்கும் விடையமாக உள்ளது.

போர் ஓய்விற்குப் பின் தோற்றம் பெற்ற மாயையும், விமர்சனமும் புலத்தையும் தாயகத்தையும் 10 ஆண்டுகளில் புரிந்துணர்வு அற்றநிலைக்கு கொண்டுசெல்கின்றது என்பதை அறியக்கூடியதாக உள்ளது . 

தாயக மக்களின் வாழ்வாதார ஜீவனோபாய தொழில் வாழ்க்கை மற்றும் கல்வி அபிவிருத்திக்கான உதவித் தொகைகளின் வீதம் குறைந்து கொண்டு செல்கின்றது. கொடைவள்ளல்கள், நன்கொடையாளர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சி கண்டுள்ளது.

போருக்குப்பின் எமது நாட்டை கட்டியெழுப்ப என்ன செய்தோம் என்றால்? மலையும் மடுவுமாகவே  நிலைமைகள் உள்ளது. 

குற்றம் காண்பதும் குறை சொல்வதும் விமர்சனங்களை அடுக்குவதும் இலகுவான விடையம். ஒரு காரியத்தை சாதிப்பது என்பது கடினமான விடையம்.

போருக்குப்பின் பல தொண்டு நிறுவனங்கள் தோற்றம் பெற்றன. ஆனால் அதே வேகத்தில் பல நிறுவனங்கள் மறைந்துவிட்டன.

தாயகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு புலம்பெயர் மக்களினால் நிரந்தர அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு கருமமாற்றப்படவில்லை என்பதை காணக்கூடியதாகவுள்ளது.

இதற்குக் காரணம் சிறுகுழுக்களாக நின்று வேலைத்திட்டங்களை செய்வதும், தாயகத்துக்கான சரியான தலைமை இல்லாததும் ஒரு காரணமாக இருக்கின்றது.

தாயக சமூகப்பணி சார்ந்த சமூக ஆர்வலர்கள் இன உணர்வாளர்கள் தொடர்ந்தும் எமது இனத்திற்கு ஏதும் செய்ய வேண்டும் என துடிப்போர் கவனத்திற்கு…

காய்க்கின்ற மரத்துக்கு கல்லெறி விழும் சமூகப்பணி செய்வோருக்கு விமர்சனங்கள் வரும், வசை பாடல்கள் நிகழும். 

சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயுங்கள்.

நிதி வழங்குவோருக்கு நிதி பெறுவோர் சட்ட ரீதியாகவும்சரி மனசாட்சிப் படியும் பதில் அளிக்கவேண்டிய கடைப்பாடு உண்டு. உரிய தரப்பினர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரடியாக தொடர்புகொண்டு பொறுமையுடன் தவறுகள் பற்றி ஆய்வு செய்து அவை திருத்தப்பட வேண்டும்.

தவறுகள் திருத்தப்பட வேண்டியவையே ஒழிய தவறுகளையும் விமர்சனங்களையும் கண்டு

 தயவு செய்து காற்றில் வரும் விமர்சனங்களை  பற்றி தீர ஆராயாமல் எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள். உங்கள் சமூகப்பணியையும் உதவித் தொகை கொடுப்பனவுகளையும் நிறுத்தாதீர்கள்.

ஒவ்வொரு சமூகப்பணியிலும் நடைமுறைப் பிரச்சினைகள் உண்டு. சமூகப்பணியில் இருக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் வெளியிலிருந்து பார்த்தால் புரியாது. புலத்திலும் சரி தாயகத்திலும் சரி சமூகப்பணியில் நிர்வாக ரீதியான பல பிரச்சினைகள் உண்டு.

தாயகப் பிரச்சினைகளை புலத்திலிருந்து கண்டமாதிரி விமர்சிக்கக் கூடாது. அதேபோல் புலத்தில் இருக்கும் பிரச்சினைகளை தாயகத்தில் இருந்து விமர்சிக்க முடியாது.

நடைமுறை ரீதியாக வேறுபாடுகளும் பிரச்சினைகளும் உண்டு.

பலர் தாயகம் சென்று ஓரிரு வாரங்கள் தங்கி வந்த பின் செய்யும் விமர்சனங்கள் கவலை அளிக்கின்றது. A-9 ஊடாக யாழ்ப்பாணம் சென்றால் விமர்சனம் செய்யும் தகுதி பெற்றுவிட்டதாக பலர் நினைக்கின்றார்கள்.

உதவி செய்யாதவர்கள் தம்மை நியாயப்படுத்த உதவி செய்கின்ற நல்ல மனிதர்களை குழப்புகின்றனர்.

 குட்டையை குழப்பி விடுவதே மகிழ்ச்சியான விடையம் என கருதி ஒரு கூட்டம் திரிகின்றது. எமது இனத்திற்கும் எமது நாட்டிற்கும் உதவிபுரிவோரை குழப்புவதற்கு என்று விமர்சனங்களை அள்ளி வீசும் பொறுப்பற்ற மனிதர்கள் தொடர்பாக கவனமாக இருங்கள்.

பொழுதுபோக்கிற்காக அல்லது வாதப் பிரதிவாதத்திற்காக அல்லது எனக்கு எல்லாம் தெரியும் என்று உங்களை நீங்கள் பெரிய ஆளாக காட்ட நினைத்து சிந்திக்காமல் கதைக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் எமது இனத்தை நாமே அளித்துக்கொண்டிருகின்றோம்.

தாயக சமூகத் தொடர்பில் இருப்பவர்களை குழப்பி விடுவதில் பலர் புலவர்களாக உள்ளனர். பாடிப் பரிசில் பெறுவதை விட பிழை பிடித்து பரிசில் பெற்று புலமையை நிருபிக்கும் புலவர்கள் தமிழர்கள் மத்தியில் அதிகம். லண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் சமூகப்பணி நிதி சேகரிப்புக்கு துணையாக இருக்கும் வர்த்தகப் பிரமுகர்கள் சமூகசேவை நலன் விரும்பிகளின் கவனத்திற்கு…

கடந்த காலங்களின் நம்பிக்கை ஒளி நிறுவனம் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பாக நாம் கவனம் எடுத்துள்ளோம்.

எமது நிறுவனத்தின் வளர்ச்சியையும் சமூக சேவை மனிதநேயத் தொண்டுப்பணியின் வளர்ச்சியையும் பொறுக்க முடியாத சில விசமிகள் எமது தொண்டுப்பணிக்கு களங்கம் கற்பிக்க முற்படுகின்றனர். பொது நலனில் சுயநலம் காண முற்படும் விசமிகளின் விமர்சன செயற்பாட்டை சரியான முறையில் கண்டறிந்து அவர்களின் நாசகார சதிவேலையை முறியடித்து எமது தமிழ் சமூக பொருளாதார விடுதலையை வென்றெடுப்போம்.

நம்பிக்கை ஒளியின் சமூகப் பணி மீது யாரும் குறைகாணும் பட்சத்தில் எம்மீதான விமர்சனங்களுக்கு உரிய முறையில் சமூகப்பணிக்கான சட்டதிட்டங்களுக்கு அமைவாக நாங்கள் பதில் வழங்க தயாராக உள்ளோம். யாராயினும் உரிய முறையில் வந்து தங்கள் முறைப்பாட்டினை முன்வைத்தால் அல்லது விளக்கம் கோரினாலும் அவற்றுக்கு பதிலளிக்க நாம் தயாராக உள்ளோம்.

தங்கள் பங்களிப்புக்கு மதிப்பளித்து தங்களை கௌரவப்படுத்தி தங்கள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நம்பிக்கை ஒளி நிறுவனத்திற்கு உண்டு என்பதையும் அது எமது தார்மீக கடமை என்பதையும் உளமார நாம் ஏற்றுக்கொள்வோம்.

தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும்  பதிலளிக்க நாம் தயார். எமது அலுவலக தொலைபேசி இலக்கம்  02086179343 தொடர்புகொண்டு சந்திப்புக்கான நேரத்தை குறித்துக்கொள்ளுங்கள்.

நாகரிகமான முறையில் நடைமுறைக்கு சாத்தியமான எமது மனிதநேய தொண்டுப்பணியை முன்னெடுப்போம். 

விழிப்புணர்வு.

எமது போராட்டம் பல நம்பிக்கை துரோகங்களை கண்டுள்ளது. அதேபோல் எமது சமூகப்பணியிலும் சில நம்பிக்கை துரோகங்களை சந்திக்க நேரிட்டால் அவ்வாறான மனிதர்களை இனங்கண்டு ஒதுக்கிக்கொள்வோம்.

அண்மைக்காலத்தில் சமூகப்பணிக்கு உதவ விரும்பாத இரக்க சிந்தனையற்ற கல்நெஞ்சக்காரர்கள் சமூகப்பணிக்கு புறத்தேயிருந்து உண்மையற்ற அவதூறான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். தயவு செய்து இவ்வாறானவர்களின் விமர்சனங்களின் உண்மைத்தன்மை குறித்து தயவு செய்து தீர ஆராயுங்கள் இவர்களின் பின்புலம் என்ன? என்ன காரணங்களுக்காக இவர்கள் விமர்சனங்களை அடுக்குகின்றார்கள் 

இனப்பற்றுடன் இனத்துக்கு நல்லெண்ணத்துடன்  உதவிபுரிந்தவர்கள் பிடிக்கவில்லை என்று ஒதுங்கியவர்கள் அமைதியாகவே இருக்கின்றார்கள்.

பிறர் உயிர்களுக்கு உதவுவதை அல்லது  எமது இனத்திற்கு உதவுவதை தடுக்கும் உணர்வு கொண்ட எந்த மனிதனையும் ஆண்டவன் மன்னிக்கமாட்டார். நாம் பிறருக்கு உதவுவதன் மூலமும் அதற்கு இணைப்புப் பாலமாய் இருப்பதன் வழியும் இறையாசி எமக்கு கிடைக்கின்றது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
shares